2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.