இந்திய குடியுரிமையை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய குடியுரிமையை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் நேற்று எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 20 லட்சத்து ஆறாயிரத்து 378 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

Share This