ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பாரிய செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலாண்டில் மட்டும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்த ஆப்பிளின் தலைமை பணிப்பாளர் எதிர்வரும் காலாண்டில் இது 1.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பல ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவுக்கும் 25 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், சீனாவைத் தவிர்த்து வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றாலும், அந்த நாடுகளிலிருந்து மாற்று நாட்டு வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 40 வீதம் வரி விதிக்கப்படுகிறது.
உலகின் முக்கிய சில்லுகள் தயாரிக்கப்படும் தாய்வான், தற்போது 20 வீதம் வரிக்கு உட்பட்டுள்ளது. வுளுஆஊ, Nஎனையை போன்றநிறுவனங்கள் இந்த வரிகளால் நேரடி தாக்கத்தை எதிர்கொள்கின்றன.
வரிகள் தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில், அமேசான், ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் எதிர்கால திட்டங்களில் தயக்கம் காட்டுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.