இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6 ஆயிரத்து 933 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானத்தில் 07 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,386 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.