கொழும்பில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 21 பேர் கைது

கொழும்பில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 21 பேர் கைது

கொழும்பு கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற  விருந்துபசாரத்தில்
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்
போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 20 ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது அதிகாரிகள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த விருந்துபசாரம் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This