225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் ஆஷூ மாரசிங்க இந்த தகவல்களை கோரியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை, வேலை வாய்ப்பு மற்றும் சொத்துப் பொறுப்பு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆஷு மாரசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.