ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபரை ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 ஐச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கொழும்பு 13 நியூஹாம் சதுக்கப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டை சோதனை செய்தனர்.
இதன்போது, 745 கிராம் ஐஸ், வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவால்வர் மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மோதர பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் முக்கிய ஆதரவாளர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்பது தெரியவந்துள்ளது.
மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.