இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில் அதிகாரி என்பதுடன், அண்மையில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவி செயலாளராகவும், அவுஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அவுஸ்திரேலியாவின் நலன்களை முன்னேற்றுவதற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பதவி விலகும் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸூக்கு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This