டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

கெர் கவுண்டி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மாத்திரம் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குவாடலூப் நதிக்கரையில் அமைந்துள்ள கிறிஸ்தவ முகாமில் தங்கியிருந்த 27 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமற் போனவர்களைத் தேடும் பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய டெக்சாஸில் மேலும் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்படோரில் இதுவரை சுமார் 850 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share This