நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை (01) நிறைவு செய்துள்ளது.
இதற்கமைய இலங்கை சுமார் 344 மில்லியன்அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறும்.
இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை இதுவரை 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாகப் பெற்றுள்ளது.