கடந்த 05 மாதங்களில் 02 தொன் போதைப்பொருள் பறிமுதல்

கடந்த 05 மாதங்களில் 02 தொன் போதைப்பொருள் பறிமுதல்

கடந்த 5 மாதங்களில் 02 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகள் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கருத்து வௌியிட்டார்.

அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 1,253 கிலோகிராம் ஹெராயினும் 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 12,439 கிலோகிராம் கஞ்சாவும் 22 கிலோகிராம் கொக்கேய்ன்னும் 1.6 மில்லியன் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share This