சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2010 – 2012 காலப்பகுதிகளில் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சஜின் வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்ட நீதவான் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.