கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத காரணத்தால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This