2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்
நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும்
என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
ரயில் தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் ரயில் வலையமைப்பின் பல பிரிவுகளில் வேகத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் இலங்கையின் ரயில் சேவையின் வினைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ரயில் தண்டவாளங்களின் மூலம் ரயிலை வழமையான வேகத்தில் இயக்க முடியும் என்றார்.
2023 ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களத்தால் திட்டமிடப்பட்ட 122,426 ரயில் பயணங்களில், 85,655 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.