மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மனித வளத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்கு அவர் இந்த முடிவைத் தெரிவித்தார்.
தமது கடமைகளை முடிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் சுமுகமாக உரையாடலில் ஈடுபட்டதுடன் அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த ராஜபக்ச மனமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
“பல வருடங்களாக எனது உயிரையும், என் குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் காப்பாற்றி, நிழலைப் போல என்னுடன் நின்றிருக்கிறீர்கள். உங்கள் தியாகங்கள், விசுவாசம் மற்றும் சேவை ஆகியவை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லோட்டஸ் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.