
பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டோர் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
