கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரகசிய வாக்கெடுப்புக்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.
மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மாநகர சபையின் மேயர் தெரிவு முறைமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன பகிரங்க வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தன.
தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்தனர்.
நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், நேரடியாக கொழும்பின் புதிய மேயரைத் தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பால்தாசர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ரீசா ஸரூக் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.