சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

தொடரும் மழையுடனான வானிலை காரணமாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.

மண்சரிவு, பனிமூட்டம், பலத்த மழை, காற்று மற்றும் வீதிகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இரவு நேரங்களில் ஔிவிளக்குகளை மங்கச் செய்யாமல் வாகனத்தைச் செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Share This