பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (11) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவங்கொடை பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட ஒரு பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல கட்டமைப்பை பிரதான கட்டமைப்புடன் இணைப்பது மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

 

Share This