முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக
அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய விசாரணைகளின் கீழ், கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஏற்கனவே CID யில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டு பொறுப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This