
ரவி குமுதேஷ் பணியிலிருந்து இடைநீக்கம்
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த இடைநீக்கம் 10.10.2024 முதல் அமுலுக்கு வரும் என்றும், அவருக்கு சம்பளமோ அல்லது கொடுப்பனவுகளோ வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு அவர் விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
