
நுவரெலியா , உடப்புசல்லா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – மூவர் காயம்
நுவரெலியா – உடப்புசல்லாபிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேன், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சிறுவன், பெண்ணொருவர் மற்றும் வேன் சாரதி காயமடைந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
