பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து

பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை நோக்கிச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட வேண்டியேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு மாநகர சபை, மொரட்டுவ நகர சபை மற்றும் தெஹிவளை ஃ கல்கிஸ்ஸ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

 

CATEGORIES
TAGS
Share This