சீரற்ற வானிலை காரணமாக 8000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 8000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 14 ஆம் திகதி முதல் நேற்று வரை மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம எதிர்வு கூறியுள்ளது.

மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமை நாளை மறுநாள் வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் வழியாக திருகோணமலை வரையிலும், காலி முதல் பொத்துவில் வரையிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு எச்சரிக்கைகளை புறக்கணித்த மீனவர்கள் பலர் கடலில் ஆபத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This