இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 92 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.