இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று

இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொவிட் தோற்றால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 மாறுபாடுகளான என்பி.1.8.1 (NB.1.8.1) மற்றும் எல்எப்.7 (LF.7) ஆகியவை அண்மையில் இந்தியாவில் கண்டறியப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் என்பி.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இதேவேளை, மே மாதத்தில் எல்எப்.7 மாறுபாட்டால்
நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This