நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த

நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த

நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடமையை நிறைவேற்றவே நாங்கள் இங்கு வருகைத்தந்துள்ளோம். நாட்டை மீட்டெடுக்கவும் நாட்டின் அமைதிக்காகவும் மாத்திரமே நாம் போராடினோம்.

தொடர்ந்தும் இதனை செய்வார்களா இல்லையா என்பது தொடர்பில் என்னால் கூற இயலாது. அரசாங்கமே அதனை தீர்மானிக்கும்.போர் இடம்பெற்றது மிகவும் கவலைக்குரிய விடயம் ஆனாலும் நமது படைகள் வெற்றி பெற்றன.  தேசிய பாதுகாப்பினால் பிரச்சினை இல்லை .நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

 

 

CATEGORIES
TAGS
Share This