பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 மணி முதல் 6.30 வரை இராணுவ வீரர் தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வீதிகளை மூடும் செயற்பாடு இடம்பெறாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ தின நிகழ்வு இடம்பெறும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுமாயின் பொல்துவ சந்தியிலிருந்து ஜயந்திபுர ஊடாக கியன்யேம் சந்தி வரை நாடபாளுமன்ற வீதியில் வாகனங்கள் கொழும்பிலிருந்து வெளியேறல் மற்றும் கொழும்புக்குள் வரும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை சந்தி வரை பயணித்து பாலம் சந்தியிலிருந்து கியன்யேம் சந்தி வரை பயணிக்க முடியும்.

அத்துடன் கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் கியன்யேம் சந்தியிலிருந்து பாலம் சந்தி ஊடாக பத்தரமுல்லை சந்தி வரை பயணித்து பொல்துவ சந்தியிலிருந்து கொழும்பு வரை பயணிக்க முடியும்.

 

CATEGORIES
TAGS
Share This