கொழும்பு – தெமட்டகொட பகுதியில் ஒருவர் அடித்துகொலை

கொழும்பு – தெமட்டகொட மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர் என்றும், அவர் மேம்பாலம் அருகே வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொடை, மஹாவில லேன் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து, தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.