பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.
கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.