தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்றைய தினம் வரை 9,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தன்சல்களை பரிசோதிப்பதற்காக 2,500 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உணவு தயாரிக்கும் பகுதிகள், தன்சல் நடைபெறும் இடங்கள், மூலப்பொருட்கள் மற்றும் நீரை தொடர்ந்து பரிசோதிக்குமாறு பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருமல், சளி அல்லது தொற்று நோய் காணப்படுபவர்கள் தன்சல்களில் கலந்துக்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Share This