உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் பரனலியனகே நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார்.

14 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தின வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலாத்காரமாக வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கு ஊக்குவித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This