யாழில் வீசிய காற்றினால் எட்டுக் குடும்பங்கள் பாதிப்பு

யாழில் வீசிய காற்றினால் எட்டுக் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட காலநிலை சீரின்மையால் எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/203 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மின்னல் தாக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

J/191 கிராம சேவகர் பிரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/141 கிராம சேவகர் பிரிவில் இரண்டுக் குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுளள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் J/150 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/180 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This