மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதன்படி , எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவால் (CID) கைது செய்யப்பட்டார்.

 

 

Share This