இந்தியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்தையும் பயன்படுத்துவோம் – பாகிஸ்தான்

இந்தியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்தையும் பயன்படுத்துவோம் – பாகிஸ்தான்

இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசியும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக எச்சரித்திருந்தார்.

எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

CATEGORIES
TAGS
Share This