ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி

ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி

பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில்
பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This