தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பழுதடைந்த வாகனத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த போது காரொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கஹதுடுவ அருகே நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி அதன் அருகில் நின்று கொண்டிருந்தபோது,
​​அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு காரின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ​​41 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This