
வெல்லம்பிட்டியவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வெல்லம்பிட்டியவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் 13 கிலோகிராம் 372 கிராம் ஹெராயின் மற்றும் 03 கிலோகிராம் 580 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES Uncategorized
