ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 750 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
வெடிப்பின் தாக்கத்தை 50 கிலோ மீற்றர் தொலைவில் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூடப்படாத பல கொள்கலன்கள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.