டேன் பிரியசாத் கொலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சமூக செயற்ப்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.
சந்தேக நபர் இன்றைய தினம் மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தார்.
வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் அன்றிரவு 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.