மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11 மணி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, அம்பாறை, பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.