ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர

உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நால்வர் கொண்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கப்படுள்ளது.

CATEGORIES
TAGS
Share This