தனிநபரொருவர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 16,000 ரூபாவிற்கு மேல் தேவை

தனிநபரொருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதம் ஒன்றிற்குத் தேவையான குறைந்தபட்ச தொகை 16,318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதமொன்றிற்கு அதிகம் செலவாகும் மாவட்டமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதமொன்றிற்கு 17,599 ரூபா தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மாதமொன்றின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தளவு செலவாகும் மாவட்டமாக மொனராகலை பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 15,603 ரூபா தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 பெப்ரவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) மதிப்பு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.