பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு – இந்தியாவில் 03 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இந்தியாவில் 03 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் அரச நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21, 2025 அன்று காலமானார், மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் மாநிலங்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி இன்றும் , நாளையும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கின் நாளில் ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் (இறுதிச் சடங்கின் திகதி தனித்தனியாக அறிவிக்கப்படும்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.