உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாது – ரணில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் பேரணியொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய மக்கள் சக்தி பல சபைகளில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிடும் . ஐக்கிய மக்கள் சக்தி பற்றி எனக்குத் தெரியவில்லை. ஒரு சபையின் தலைவர் சபையில் உள்ள கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, இந்த சபைகளுக்கு முடிந்தவரை பல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதே எங்கள் நோக்கம்.
ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி மக்களிடம் வாய்ப்பு கோரியது. அந்த வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவு என்ன? அந்த வாய்ப்பை L-போர்டு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அதிக அனுபவம் வாய்ந்த நபர்களுக்குக் கொடுக்குமாறும் கூறினேன்.
ஆனால் L-போர்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது, வாகனம் ஏற்கனவே விபத்துக்குள்ளாகிவிட்டது.
சீனாவிற்குப் பின்னர் சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கம் எங்களிடம் உள்ளது. ஏனென்றால் நாங்கள் ஒரு கடிதம் அனுப்பியதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொண்ணூறு நாட்களுக்கு வரிகளை ஒத்திவைப்பதாகக் கூறினார்,” என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.