
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், பல சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
