பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பில்
அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த செய்தியில் அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரிஉல்ல பகுதியில் நடைபெற்றது
எனப் பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பான விடயங்களே தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

 

Share This