இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள  இலங்கையர்களுக்கு  இலங்கை தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப்
படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று முதல் 26 ஆம் திகதி வரை இஸ்ரேலின் பல பகுதிகளில் அங்கிருக்கும் இலங்கையர்களினால் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு தூதுரகம் அறிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This