யோஷிதவுடன் வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினர் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

யோஷிதவுடன் வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினர் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கொழும்பு – யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தற்போது அவர்கள் வசித்த பகுதிகளை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்வுடன் வந்த ஒரு குழுவினர், இரவு விடுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளனர்.

களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இவர்களில் ஒருவரின் கையில் அணிந்திருந்த ஆபரணம் ஒன்று தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது இவர்கள் எட்டு பேரும் அப்பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

களியாட்ட நிலைய முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கு இணங்க சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது யோசித்தவும் அவரது மனைவியும் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share This