தேசபந்து நீதிமன்றில் முன்னிலை

தேசபந்து நீதிமன்றில் முன்னிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று (20) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னனகோன், நேற்று (19.03) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பான உண்மைகளை பரிசீலித்த பின்னர், பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்று (20) தீர்மானிக்கப்படும் எனகூறி, முன்னாள் பொலிஸ் மா அதிபரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (20.03) உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் நேற்று (19) பிற்பகல் விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Share This